பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸின் தெற்கு மாகாணமான டவாவோ டெல் சுரில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கத்தினால் பாரியளவிலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்ப்பதாக நாட்டின் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.